இமாச்சலப் பிரதேசத்தில் நவம்பர் 12ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், மொத்தமுள்ள 68 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்றும், டிசம்பர் 8ஆம் தேதியன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
மேலும், 80 வயதிற்கு மேற்பட்டோருக்கும், மாற்றத்திறனாளிகளுக்கும் வீட்டிலேயே வாக்களிக்கும் வசதி செய்துதரப்படும் என்றும், வேட்பாளர்களின் குற்றப்பிண்ணனியை அறியும் வகையில், இணையதளத்தில் விவரங்கள் பதிவேற்றப்படும் என்றும் தேர்தல் ஆணையர் அறிவித்தார்.